இந்தியாவில் எந்த ஒரு
சமுதாயமாவது தரக்குறைவான பழிகளைச் சுமக்கிறது என்றால் அது நிச்சயம் இஸ்லாமியச்
சமுதாயமாகத்தான் இருக்க முடியும்.
தரக்குறைவுக்கு இந்தச் சமூகம் எப்போதும் காரணமாக அமைவதே இல்லை.
இது உலக வரலாற்றின் போதனையாக இருக்கிறது.
அபாண்டங்களை இந்தச் சமுதாயத்தின் மீது
தொடர்ந்து கொட்டுகிறார்கள். அவச் சொற்களை வசைமாரியாக கக்குகிறார்கள்.
முஸ்லிம்கள் பிற்போக்குவாதத்தில்
ஊறிப்போனார்கள். அவர்கள் அடிப்படைவாதிகள். நவீன உலகம் அவர்களுக்கு இன்னும்
அறிமுகம் ஆகவில்லை. குகைக்குள் வாழ்ந்தவர்களாகவே இன்னும் குறுகிப் போய்
இருக்கிறார்கள். என்றெல்லாம் இங்கே யார் யாரோ பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்
வைத்திருக்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
உலகம் கம்யுனிஸத்தால் கபளீகரம் செய்யப்படும்
என்று கருதப்பட்ட காலம் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. கம்யுனிஸம் கரைந்து
கொண்டே வருகிறது. அந்த இடத்தை கேபிடலிஸம் எனச் சொல்லப்படும் முதலாளித்துவம்
முழுக்கப் பிடித்துக் கொண்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
இவற்றுக்கு மாறாக இஸ்லாம் அங்கே தன்னுடைய
வெற்றித் திருமுகத்தை அறிமுகப்படுத்துகிறது. இதுதான் பிரச்சனை. இதைத்தான் இங்கே
பலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
முஸ்லிம் பெண்கள் கோணிகளால் மூடப்பட்ட ஒரு
பொருள் போல் இங்கே பத்திரிக்கைகளால் சித்தரிக்கப்படுகின்றனர்.
நாம் கோஷா முறையில் இருந்தால் அது பழமைவாதம்.
பெண் அடிமைத்தனம்.
குஜராத்திகளும், மார்வாரிகளும் அப்படித்
தன்னைக் காட்டினால் அது கலாச்சாரம்.
அவர்கள் கைவசம் பிரச்சார சாதனங்கள்
இருக்கின்றன. எனவேதான் பத்திரிகை தொடங்கி அத்தனை பிரச்சார சாதனங்களும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு
எதிராக திருப்பப்பட்டுவிட்டன. எப்படி இது நடந்தாலும் இறுதி வெற்றி
இஸ்லாத்திற்குத்தான். இதுதான் இதுவரை உள்ள உலகச் சரித்திரம். இன்ஷாஅல்லாஹ்
இதுவேதான் இனிமேலும் தொடரும்.
[1997, ஜனவரி மாதம்
நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் சமுதாய நலச்சங்கம் மாநில மாநாட்டில் பேசியது. நன்றி: இஸ்லாமிய சகோதரத்துவ குரல்]
No comments:
Post a Comment